கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை வேண்டும்.மூணாறை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய ரோடாக கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நேரியமங்கலம் முதல் போடிமெட்டு வரை வளைவுகள் நிறைந்து, பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. இவற்றில் வெளி ஊர்களிலும்,வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றன.
ஓணப்பண்டிகையை முன்னிட்டு மூணாறு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகில் உள்ள இருட்டுகானம் முதல் நேரியமங்கலம் பாலம் வரை கடந்த ஆறு நாட்களில் 16 வாகன விபத்துகள் நிகழ்ந்தது. உயிர் சேதங்கள் இல்லை என்ற போதிலும்,பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சீயப்பாறை, சாக்கோச்சி வளைவு போன்ற பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.தொடர்ந்து விபத்து நடக்கும் நிலையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கையில்லை.மூணாறு முதல் இருட்டுகானம் வரையிலும் ரோட்டில் தடுப்பு சுவர்கள் இன்றி ஆபத்தாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரோட்டின் ஓரங்களில் இரும்பு தகடுகளை பொருத்துவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும்.
போடி முனார் சாலையில் விபத்து
No comments:
Post a Comment