தேய்பிறை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டணி, வேட்பாளர் தேர்வில் உள்ள குழப்பம் காரணமாக வேட்புமனு தாக்கல் தாமதமாகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்., 22 ல் துவங்கி 29ல் முடிவடைகிறது. போட்டியிட உள்ளவர்கள் உள்ளாட்சிகளுக்கு கட்ட வேண்டிய, நிலுவை கட்டணங்களை கட்டுவதில் மும்முரமாக உள்ளனர். தற்போது தேய்பிறையாக உள்ளது. வரும் செவ்வாயன்று அமாவாசை. அன்றோ, அதற்கு பிறகு வளர்பிறையிலோ, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களிடையே மாற்றப்படுவோமா என்ற குழப்பம் உள்ளது. தி.மு.க., வில் முழுமையான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. கம்யூ., களிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நிறைவடையாததால் விரக்தியில் உள்ளனர். இந்த குழப்பமெல்லாம் திங்களுக்குள் தீர்ந்து விடுமென நம்புகின்றனர். 27,28,29 ஆகிய மூன்று நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment