DINDIGUL மாவட்டத்தில், ஆளும்கட்சியினர் மது பாட்டில்களை முறைகேடாக விற்கின்றனர். இதனால் டாஸ்மாக் விற்பனை குறியீட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 164 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைகளில் விற்பனை மாதம்தோறும் கணக்கிடப்படுகிறது. கொடைக்கானல், பழநி சுற்றுலா தலமாக இருப்பதால், விற்பனை (குறியீடு) அதிகமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக கொடைக்கானல், பழநி, நத்தம், சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டையில், மது பாட்டில்களை, ஆளுங்கட்சியினர் விற்கின்றனர். இவர்கள் புதுச்சேரியில் மது பாட்டில்களை வாங்கி, இங்கு விற்பனை செய்கின்றனர். இதில் பலர் ஆளும்கட்சியின் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கின்றனர்.தயக்கம்: மது பாட்டில்களை வெளியில் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்தால், ஆளும்கட்சியின் பிரமுகர்களின் தலையீடு உள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர்.குறியீடு குறைவு: வெளியிடங்களில் மது விற்பனை செய்வதால், டாஸ்மாக் கடையில் விற்பனை குறியீடு குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், 17 சதவீதமாக இருந்த குறியீடு, கடந்த மாதம் 10 ஆக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment