தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பல ஆயிரம் ஓட்டுகள் குறைந்துள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், போடி, தேனி, பெரியகுளம், கூடலூர் ஆகிய நகராட்சிகள் உள்ளது. நேற்று முன்தினம் வாக்காளர் பட்டியல் வெளியானது.இதில் பல ஆயிரம் ஓட்டுகள் ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்திருந்தது கண்டு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.2006 தேர்தலில் கம்பம் நகராட்சியில் 48 ஆயிரத்து 65, போடியில் 59 ஆயிரத்து 192, சின்னமனூரில் 27 ஆயிரத்து 523, தேனியில் 60 ஆயிரத்து 194, பெரியகுளத்தில் 36 ஆயிரத்து 64 ஓட்டுகள் இருந்தது.
கூடலூர் நகராட்சி அப்போது உருவாகவில்லை.ஆனால் தற்போது, கம்பம் 48 ஆயிரத்து 981, சின்னமனூர் 27 ஆயிரத்து 714, போடி 51 ஆயிரத்து 37, தேனி 56 ஆயிரத்து 07, பெரியகுளம் 30 ஆயிரத்து 176 ஓட்டுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சின்னமனூரில் 191, போடி 8 ஆயிரத்து 155, தேனி 4 ஆயிரத்து 187, பெரியகுளம் 5 ஆயிரத்து 888 ஓட்டுகள் குறைந்துள்ளது. கம்பம் நகராட்சியில் மட்டும் கடந்த தேர்தலை விட 916 ஓட்டுகள் அதிகரித்துள்ளது. இந்த குறைவு அரசியல் கட்சியினரிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment