கூட்டணி கட்சியினரே தி.மு.க.,வை வெறுக்கின்றனர்'' என அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி செயலர் கருப்பன் துவக்க உரையாற்றினார். மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன் வரவேற்றார். கோவிந்தராஜ், பன்னீர்செல்வம், சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன், முருகுமாறன் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், "கருணாநிதி கடந்த தேர்தலில் கூட்டணி பலம் பற்றி பேசுவார். இந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில்லை என்று கூறுகிறார். அந்த அளவிற்கு ஸ்பெக்ட்ரம், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த ஆட்சியில் தி.மு.க., வினர் தவறு செய்ததை கூட்டணி கட்சியினரே வெறுத்து பேசும் அளவிற்கு தி.மு.க., வின் நிலை உள்ளது' என்றார்.ஒன்றிய பேரவை செயலர் ஜோதிபிரகாஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment