Friday, 23 September 2011

வேட்பாளர் பரஞ்ஜோதி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்

அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, திருச்சி பிஷப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, முதற்கட்டமாக, தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டினார். இரண்டாம்கட்டமாக, நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களை நேற்று சந்தித்தார். திருச்சி பிஷப் பால்வசந்தகுமார், சோழிய வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் ஜெயபால், கேசவராஜ், கனகராஜ், முத்தரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச்செயலாளரும் எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார், ஸ்ரீரங்கம் பகுதிச்செயலாளர் டைமன் திருப்பதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment