இடுக்கி அணை அருகே நேற்று இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கேரள மாநிலம் இடுக்கி அணை அருகே தோப்புராங்குடி, முருக்காச்சேரி, கட்டப்பணை அருகே தங்கமணி ஆகிய இடங்களில் நேற்று பகல் 3.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இடுக்கி அணை, வல்லக்கடவில் உள்ள சிஸ்மோகிராப் கருவியில் 2.1 ரிக்டர் அளவில் பதிவானது. அதன்பின் 3.45 மணிக்கு 1.2 ரிக்டர் அளவில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் இடுக்கி அணை அருகே இதே போல் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கி அணையைச் சுற்றிலும் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
No comments:
Post a Comment