Wednesday, 21 September 2011

திருச்சி-தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
.
திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 13ம் தேதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழுவை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,

1. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கழகப் பொருளாளர் நிதித் துறை அமைச்சர்

2.  கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கழக தலைமை நிலையச் செயலாளர் வேளாண்மைத் துறை அமைச்சர்

3. ஆர். வைத்திலிங்கம் அவர்கள்  தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சுர் 4. என்.ஆர். சிவபதி அவர்கள்  திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment