மனநோய்க்கு மருந்தாகும் கஞ்சா
இளைய தலைமுறையினரால் போதைப் பொருளாக உபயோகிக்கப்படும் கஞ்சா செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பண்டைய எகிப்தில் கண் வீக்கம் போக்கவும், கருப்பையினை குளிர வைக்கவும், இத்தாவரம் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தியாவில் கி.மு. 800 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இலைகளின் வடிசாறு அல்லது இலைகளை வலிபோக்கும் மருந்தாக அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிர ஆய்வுகளுக்குப் பின்னர் வலி போக்கும் மருந்தாக பரவலாக சிபாரிசு செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணி வலி போக்குவியாக இத்தாவரத்தினை பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. இன்றைக்கு அதிக அளவில் போதை வஸ்துவாக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் விதை மற்றும் தண்டு நார்களுக்காகவும், கள்ளத்தனமாக கஞ்சாவிற்காகவும் தற்போது மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் 60க்கும் மேற்பட்ட கன்னாபினாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவையே இத்தாவரத்தின் செயல் ஊக்கப் பொருட்களாகும். ஃபிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. விதை எண்ணெயில் லினோலியிக் அமிலம் உள்ளது.
மருத்துவப் பயன் உடைய பகுதிகள்
தாவரத்தில் இருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள், இலைகள், பெண் தாவரத்தின் மலர் கொண்ட அல்லது கனி கொண்ட நுனிப்பகுதி மற்றும் விதைகள் பயனுள்ள பகுதியாகும். தண்டு பகுதியில் இருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது.
பாங், கஞ்சா, சரஸ்
பாங், கஞ்சா, சரஸ் போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது. இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
மனநோய்க்கு மருந்து
பாங் மற்றும் கஞ்சா பசி தூண்டுவி. நரம்பு செயல் தூண்டுவி. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. பாங்குடன் பால், சர்க்கரை, நீர் சேர்த்து போதை தரும் பானமான மாஜூம் தயாரிக்கப்படுகின்றது.
மனமாறாட்டம், மனநோய், ஆகியவற்றிர்க்கு மருந்தாக சரஸ் சிபாரிசு செய்யப்படுகிறது. இது ஆஸ்துமா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. இது அபின் போன்றே பயன்படுத்தப்படுகிறது. அபின் பயன்படுத்தப்படும் மகப்பேறு மருத்துவம், மூட்டுவலி, மாதவிடாய், முடக்குவாதமென அனைத்திற்கும் மருந்தாகிறது. ஆனால் அபின் போன்று பயன்பாட்டிற்குப் பின் ஏற்படும் பின்விளைவுகள் அற்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. மனச்சோர்வு போக்கும். தூக்கத்தை தூண்டுவதாக இது பயன்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது
இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. இதில் காணப்படும் polyunsaturated கொழுப்பு அமிலங்கள் சிறந்த துணை உணவாக பயன்படுகிறது. இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப்போக்கினைத் தடுக்கிறது.
அண்மைக்கால ஆய்வுகள் கஞ்சா தாவரத்தில் காணப்படும் செயல் ஊக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளன. இவை வாந்தியை தடுக்கக் கூடியது. வேதி மருத்துவம் பெறும் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் தண்டுவட பாதிப்பு, கால்வலிப்பு, தொடர்வலிகள் மற்றும் பசியின்மைக்கும் சிறந்த மருந்தாகிறது.
English Summary
In recent years a wealth of sound scientific information has become available to support the use of marijuana for medical purposes. Many countries and states now recognize the legitimacy of marijuana as a therapeutic medication. Individuals with serious or life threatening diseases unresponsive to traditional therapies should be permitted to avail themselves of this therapeutic option.விரல்களின் முத்திரையில் வியாதிகள் தீரும்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
விரல்களும் மூலகங்களும்
கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
சிந்தனைச் சக்தி
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும்.
காது நன்கு கேட்க!
காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.
இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.
மருத்துவ குணம் கொண்ட ஒமம்
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.
மருத்துவ குணம் கொண்ட ஒமம்
இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.
வயிறுப் பொருமல் நீங்க
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.
பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
ஓமத்திரவகம்
ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
உடல் பலம் பெற
உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.
No comments:
Post a Comment