Friday, 17 June 2011

இலைகளும் மருத்துவ குணங்களும் - மயூரா அகிலன்

இலைகளும் மருத்துவ குணங்களும்







உணவை  ஜீரணிக்கும்  கரிவேப்பிலை







‘ கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.



இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது. இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக்கொள்ளப்படுகின்றன.  மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள் :







வளரும் இடம்



தென்கிழக்கு ஆசியாவின் மித வெப்ப காடுகளைச் சேர்ந்த கரிவேப்பிலை இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.







வேதிப்பொருட்கள்



கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.







மருத்துவ பயன்



கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர்  வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது.  கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.



வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.



உணவின் பயன்படும் கறிவேப்பிலை



தமிழ்நாட்டு சமையலின் முடிவில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால்தான் அந்த உணவு முற்றுப்பெறுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாக பயன்படும் இந்த கறிவேப்பிலையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்  உணவில் கலந்து விடும். உணவில்பொருளில் வேண்டாத பொருளைப்போல இதனை எடுத்து கீழே போட்டு விடுபவர்களும் உண்டு.



கறிவேப்பிலை இலையை துவையல் செய்தும் சப்பிடலாம்.  பித்த நரையை போக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள்



எனக்கென நீ வந்தாய் ….



-    மயூரா அகிலன்







என் உயிரில் கலந்தவனே !



சூரியனை  நான்  கேட்டேன்….

குளிர் நிலவாய் நீ வந்தாய் !



கோடையை நான் கேட்டேன்….



வசந்தமாய் நீ வந்தாய் !



பாலையை நான் கேட்டேன்….



சோலையென நீ வந்தாய் !



கடும் மழையை நான் கேட்டேன்….



தூவானமாய் நீ வந்தாய் !



வண்ணங்களை நான் கேட்டேன்….

 

No comments:

Post a Comment