Thursday 15 December 2011

உணவு பொருட்கள் கிடைக்காமல் தமிழர்கள்

கேரளா அரசின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானதால், இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர்.முல்லை பெரியாறு நீர் தேக்க அளவை, 120 அடியாக குறைக்க, கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விபரம் பரவியதால் இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு, தமிழர்களின் சொத்துகள் மீதான தாக்குதல், ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.அடிமாலியில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப சென்ற தமிழர்களை, கேரளா வன்முறை கும்பல் தாக்கியது. உடும்பன்சோலை பகுதியில், தமிழர்களின் வீடுகள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களில் ஏலக்காய் பதப்படுத்தும் ஸ்டோர்கள், நீர் தெளிப்பு கருவிகள், ஜெனரேட்டர்கள், குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. பொள்ளாச்சியிலிந்து, மறையூர் வழியாக அத்தியாவசிய பொருட்கள் தடைபடாமல் வருவதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள தமிழ் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் தமிழர்கள் அவதிப்படுகின்றனர்.

No comments:

Post a Comment