Thursday, 15 December 2011

முல்லைப் பெரியாறு -ஏலத்தோட்டம் சூறையாடப்பட்டது

உத்தமபாளையத்தை சேர்ந்வரின் 60 ஏக்கர் ஏலத்தோட்டம் சூறையாடப்பட்டது. பங்களாவிற்கு தீ வைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை போராட்டம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதனால் இருமாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். சொத்துக்கள், குறிப்பாக ஏலத்தோட்டங்கள் சேதப்படுத்தப்படுகிறது. ஏலச் செடிகள் மற்றும் மரங்களை வெட்டி அழிக்கின்றனர். நெடுங்கண்டம் மற்றும் உடும்பன்சோலை பகுதியில் தற்போது வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது. உத்தமபாளையத்தை சேர்ந்த பரீத்கான் என்பவருக்கு நெடுங்கண்டம் அருகில் கூலக்காவுக்கும், யானைக்காவுக்கும் இடையே 60 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ளது. தோட்ட வளாகத்தில் பங்களா, ஸ்டோர் ரூம், காய் உலர்த்தும் அறை உள்ளது. நேற்று முன்தினம் கேரள கும்பல் ஒன்று புகுந்து ஏலச்செடிகளை வெட்டி அழித்தது. பரீத்கான், கேரள போலீசாருக்கு தகவல் தந்துள்ளார். போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றுள்ளனர். போலீசார் பாதுகாப்பிற்கு இருக்கும் போதே, மற்றொரு கும்பல் அவரது எஸ்டேட்டிற்குள் புகுந்து எஸ்டேட் பங்களாவிற்கு, தீ வைத்தது. ஸ்டோர் ரூம், காய் உலர்த்தும் அறை என அறைகளும், தொழிலாளர் குடியிருப்புகளும் சேதப்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

No comments:

Post a Comment