4 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்த 4 வயது சிறுமியை அப்பள்ளியின் முதல்வரும், ஆசிரியை ஒருவரும் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி அச்சிறுமியின் தாயார் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எனினும் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடலூரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. எனினும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் மற்றும் மனுதாரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
its nice blog
ReplyDeleteBook online bus ticket from Redbus