ஹோமோ செக்ஸ் விவகாரத்தில் மாணவர் படுகொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
கொடைக்கானல், ஜன. 23-
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கீழானவயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மகன் சுரேஷ் பாண்டி (வயது16).
இவர் தேனி மாவட்டம் போடி லட்சுமிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த வாரம் பொங்கல் விடுமுறையில் சுரேஷ் பாண்டி வீட்டுக்கு வந்து இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ் பாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் கீழானவயல் அருகே உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் தலையில் கல்லை போட்டு தலை நசுங்கிய நிலையில் சுரேஷ் பாண்டி பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment